Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் அதிர்ச்சி ஏற்படுத்திய மாட்டிறைச்சி விவகாரம்! 110 கிலோ பழைய இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில், மாநகராட்சி பகுதி-1 உணவு பாதுகாப்பு அலுவலர் அச்சுதராம், அண்ணா நகர் 12வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் மாடு வதை செய்து மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். மேலும் உரிய வெப்பநிலையில் பராமரிக்கப்படாமல் வைத்திருந்த 110 கிலோ பழைய மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், அந்த இறைச்சி மாநகராட்சி உதவியுடன் கிருமிநாசினி தெளித்து புதைத்து அழிக்கப்பட்டது.மேலும், வீடுகளில் இறைச்சி விற்பனை செய்ய அனுமதி இல்லை இதுபோன்று விதிமீறலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்  எச்சரிக்கை விடுத்தனர். 

செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு;-9655550896,0461-790026.
 
 

Exit mobile version