தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல்.!

தூத்துக்குடி,டிசம்பர்-6:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டுனர்களுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது கடந்த வாரம் 35 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவின்பேரில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆலோசனையின் படி நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மேற்பார்வையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பணியாளர்கள் மாநகராட்சி பணியாளர்கள் வியாழக்கிழமை இரவு ஒரு மணி அளவில் பாளை ரோடு அரசு பாலிடெக்னிக் முன்பு சாலைகளில் திரிந்த எட்டு மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்பு முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் இரவு நேரத்தில் போக்குவரத்து இடையூறாக தெரிந்த 17 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் இரவு 4 மணி நேரம் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 17 பெரிய மாடுகளும் 8 கன்றுக்குட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி கோசாலையில் கொண்டு ஒப்படைக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு மாநகராட்சி சார்பில் நாத்து கொடுக்கப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா சுகாதார அலுவல ராஜபாண்டி நேரில் சென்று மாடுகளை பார்வையிட்டு மாடுகளுக்கு தேவையான உணவுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று அங்கு பணியில் இருந்த பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில்: பொதுமக்களுக்கு இடையூறாகவும் வாகனத்துக்கு இடையூறாகவும் மாநகராட்சி பகுதிகளில் மாடுகளை சாலைகளில் திரிவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தொடர்ந்து இதுபோல செயல்களில் ஈடுபட்டால் மாடுகளை பறிமுதல் செய்யப்பட்டு தென்காசியில் உள்ள கோசாலைகளில் ஒப்படைக்கப்படும் என்று மேயர் ஜெகன் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் நள்ளிரவில் 25 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply