தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி…பொறியியல் பட்டதாரி சாவு!

தூத்துக்குடி,டிசம்பர்-17,

தூத்துக்குடி, வடக்கு சோட்டையன் தோப்பு கிராமத்தைச் சார்ந்த 21 வயதான ஹரிஹரன்.இவர் பொறியியல் படித்த பட்டதாரி ஆவார்.இவரின் படிப்பிற்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காத காரணத்தினால் தனது குடும்பத்தின் வறுமையை உணர்ந்து ஒரு கட்டிட பொறியாளரிடம் சில ஆண்டுகளாக கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று முள்ளக்காடு சந்தோஷ் நகரில் ஒரு புதிய வீடு கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது அங்குள்ள மின்சார மோட்டாரை தூக்கும்போது அதிலிருந்து மின்சாரம் தாக்கியயது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் அ.சார்லஸ் கூறுகையில்:-தூத்துக்குடி மாவட்டம், வடக்கு சோட்டையன் தோப்பு கிராமத்தைச் சார்ந்த 21 வயதான திரு.ஹரிஹரன் பொறியியல் படித்த பட்டதாரி ஆவார்.
இவரின் படிப்பிற்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காத காரணத்தினால் தனது குடும்பத்தின் வறுமையை உணர்ந்து ஒரு கட்டிட பொறியாளரிடம் சில ஆண்டுகளாக கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
அவரின் உத்தரவுப்படி நேற்று முள்ளக்காடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் புதிய வீடு கட்டும் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமலும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்காமலும் குற்றமுறு எண்ணத்துடன் அலட்சியமாக அஜாக்கிரதையாக அவரை பணிக்கு அமர்த்தியவர் வேலை வாங்கிய காரணத்தினால் நேற்று மாலை பணியிடத்திலேயே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார் என்கிற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது பொருளாதாரச் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு கூலி வேலைக்குச் செல்லும் தலித் இளைஞர்களுக்கு தொடர்ந்து இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.
எனவே இளைஞரை பணிக்கு அமர்த்திய பொறியாளர், அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் கவன குறைவாக தன்னுடைய பணியை சரிவர செய்யாத மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட அத்தனை பேர்களும் தங்களது பொறுப்புணர்வை உணர்ந்து இறந்து போன ஹரிஹரன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்களும், குடும்பத்தினரும் கோரிக்கை வைக்கிறோம் என்றார்.

Leave a Reply