தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரம் நடும் விழா: பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கல்!

தூத்துக்குடி,டிசம்பர்-21,

தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணி பாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் மரக்கன்று நடுவது என்று முடிவு செய்யப்பட்டு அதனடிப்படையில் தூத்துக்குடி ஆல்கன் டிரஸ்ட் சார்பில் 397வது வார மரம் நடும் நிகழ்ச்சி கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியாக பிரையன்ட் நகர் வள்ளிநாயகபுரம் அடுத்துள்ள எஸ்ஆர் நகர் பகுதியில் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் இணைந்து மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நடவு செய்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழாவினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநிலத்தலைவர் மருதப்பெருமாள். செயலாளர் ஜெபராஜ், கவுன்சிலா் சரவணக்குமாா், மாவட்ட திமுக பிரதிநிதி நாராயணன், வட்டச்செயலாளா் ரவீந்திரன், வா்த்தக அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மற்றும் மதன்டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Leave a Reply