தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார தொடர்பான பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில், மாதந்தோறும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஏப்ரல் 5, 2025 சனிக்கிழமை அன்று, மாவட்டத்தின் மின் வாரிய அலுவலகங்களில் காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களின் மின் தொடர்பான பிரச்சனைகளை அதிகாரிகளிடம் நேரில் தெரிவித்து பயனடைந்தனர்.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாமாநகராட்சி 14வது வார்டை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் காளிதுரை, பொதுமக்களின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் மனுவாக வழங்கினார்.அதனை தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகள், பெற்ற மனுக்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்தனர்.இந்த நிகழ்வின் போது சந்தனராஜ்,குமார்,சுரேஷ்,கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.