மாணவர்களின் எதிர்காலத்திற்காக 301 மடிக்கணினிகள் – அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்..

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் 301 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முத்துராஜா வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்

தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களே உறுதி செய்கின்றன என்றும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் திருமணி ஸ்டாலின், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், வட்டச் செயலாளர் சிங்கராஜ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பாலகங்காதேவி நன்றியுரையாற்றினார்.

Leave a Reply