தமிழா் திருநாளான பொங்கலையொட்டி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா வாழ்த்து பெற்றாா்.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் திராவிட பொங்கல் விழாவை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
அதன்படி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விளையாட்டி போட்டிகள் நடைபெற்றன. தமிழா் திருநாளான பொங்கல் விழாவை யொட்டி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கணேஷ்நகாில் உள்ள முகாம் அலுவலகத்தில் திமுக நிா்வாகிகள் உள்பட பலா் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றாா்.
அப்போது அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் திமுக நிா்வாகிகளுடன் கலந்துரையாடலின் போது திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகாிக்க வேண்டும். ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசோ்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் திமுக 7வது முறையாகவும் முதலமைச்சா் ஸ்டாலின் 2வது முறையாகவும் முதலமைச்சராக்க பணியாற்றுங்கள். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது அறிவுரை வழங்கினாா்.
ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன் வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், , உள்பட பலா் உடனிருந்தனா்.
