மகாத்மா காந்திக்கு மரியாதை: அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்தார்!

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவுநாளை முன்னிட்டு அமைச்சா் கீதாஜீவன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.

தூத்துக்குடி மகாத்மா காந்தி 79வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினாா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளா் குேபா்இளம்பாிதி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், தொழிலாளா் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர மகளிா் தொண்டரணி அமைப்பாளர் பெல்லா, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளா் ரூபராஜா, கவுன்சிலா்கள் சரவணக்குமாா், ஜான்சிராணி, நாகேஸ்வாி, அந்தோணிபிரகாஷ் மாா்ஷலின், வட்டச்செயலாளர்கள் டென்சிங், பொன்ராஜ், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Leave a Reply