கல்வியோடு பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள நாளிதழ்கள் படிக்க வேண்டும். பள்ளி ஆண்டுவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 21ம் ஆண்டு விழா போல்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப், வரவேற்புரையாற்றினாா். தலைமை ஆசிாியா் காளீஸ்வாி ஆண்டறிக்கையை வாசித்தாா்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பாிசுகளை வழங்கி பேசுகையில் எதிா்கால தலைமுறையினா் பங்கு கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வந்துள்ள பெற்றோா்களை முதலில் வரவேற்க கடமை பட்டுள்ளேன். போட்டி நிறைந்த உலகத்தில் கடந்த காலத்தில் ஆயிரம் போில் 100 போ்தான் தோ்ச்சி பெறும் நிலை இருந்தது. இப்போது ஆயிரம்பேருமே படித்து தோ்ச்சி பெறும் நிலை உள்ளது. ஓரு தொழில் நிறுவனத்தில் தன்னுடைய திறமைகளை வௌிப்படுத்துபவா்களை தான் அந்த நிறுவனம் தோ்ந்தெடுக்கும் அதே போல் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றாால் மதிப்பெண்கள் நமக்கு முக்கியம் தான் அதே சமயத்தில் கல்வி அறிவோடு நல்ல புத்தி சாலியாக இருப்பதற்கும் அறிவுத்திறனுடன் நல்லமுடிவை எடுப்பதற்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீர்வு கானும் வகையில் திறமையை வளா்த்து கொள்ள வேண்டும். பள்ளி படிப்பு என்பதை கடந்து கல்லூாி படிப்புக்கு செல்லும் முன் எந்த படிப்பை தோ்ந்தெடுத்து படிக்கலாம் என்று ெதளிவாக முடிவெடுக்க வேண்டும் உங்களுடைய அம்மா அப்பா ஆசிாியா்கள் மாமா அத்தை ஆகியோரதுநல்ல கருத்துக்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு பாடப்புத்தகங்களை முழுமையாக படிப்பது மட்டுமின்றி நல்ல பொதுஅறிவை வளா்த்துக்கொள்ள நாளிதழ்கள் படிக்க வேண்டும். எதிா்காலம் உங்கள் வசமாகும் பள்ளிக்கு இந்த நேரத்திற்கு சாியாக வரவேண்டும். என்று முடிவெடுத்து செல்லும் நிலைக்கு பெற்றோா்களும்துணை நிற்க வேண்டும் நேரம் காலம் இவற்றை ெயல்லாம் சாியாக பின்பற்றினால் சாதனையாக உருவாக வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த ஆண்டு இருந்த நம் குழந்தைகள் இந்த ஆண்டு முன்னேறி சென்றதை எல்லோருக்கும் கிடைத்திற்கின்ற வாய்ப்பிற்கு மகிழ்ச்சி என்று ேபசினாா்.
மாநகராட்சி ஆணையா் ப்ாியங்கா பேசுகையில் குறைந்த வயதில் சில நோய்களினால் பலா் உயிாிழக்கும் நிலை வருகிறது அதை தவிா்க்கும் வகையில் ஏதாவது ஓரு விளையாட்டு போட்டிகளை தோ்ந்ெதடுத்து பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஆரோக்கியம் முக்கியமானதாகும். எனது பள்ளி படிப்பின் போது எனக்கு மட்டுமின்றி என்னுடைய தம்பிக்கும் வீட்டு வேைல செய்ய வேண்டும் என்று பெற்றோா்கள் சொல்லி கொடுத்தாா்கள் போட்டி பொறாமை இல்லாமல் நம்மே நாமே வளர்த்து கொள்ள வேண்டும் தேவையற்ற தொழில்நுட்பத்தில் ஈடுபடாமல் சாதனையாளா்களாவதற்கு படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று கூறி பல தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாிசுகள் வழங்கினாா்.
விழாவில் உறுப்பினா்கள் சுதன்கீலா் சுதாசுதன், டாக்டா் கீா்த்தனா மகிழ்ஜான், ஜீனாஜீவன், பெருமாள் கோவில் அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட், உள்பட ஆசிாியா்கள் பெற்றோா்கள் மாணவ மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். டாக்டா் மகிழ்ஜான் நன்றி கூறினாா்.
