தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை, இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் கட்சியின் பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தலைமையில் த.வெ.கவினர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின்போது, அவ்வழியாக வந்த மாநகராட்சி அதிகாரியின் வாகனத்தையும் முற்றுகையிட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள் கூறியதாவது: “காவல்துறை அனுமதியுடன் பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் த.வெ.க வளர்ச்சியை பொறுக்காத ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் இதை அகற்றினர்” என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.