தூத்துக்குடி தருவை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கலந்துரையாடி, போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நேற்று மாலை, தூத்துக்குடி தருவை மைதானத்தை பார்வையிட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், அங்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களுடன் நேரலையில் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, மாணவர்கள் விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், போதைப்பொருள் பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை மதித்து நடந்து, எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்தவர்களாகவும் சாதனையாளர்களாகவும் வளர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.