தூத்துக்குடியில் நாய்கள் தொல்லை: மாநகராட்சிக்கு புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அல்லது நாய்கள் தொடர்பான வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாய்கள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள நாய்கள் தொல்லைகள் குறித்து மாநகராட்சிக்கு நேரடியாகத் தெரிவிக்க இந்த கட்டணமில்லா எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நாய்கள் தொடர்பான எந்தவொரு பிரச்சனைக்கும், மாநகராட்சிக்குச் சொந்தமான இந்தக் கட்டணமில்லா 18002030401 எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply