தூத்துக்குடியில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு: அமைச்சர் டிஆர்பி. ராஜா அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டிஆர்பி. ராஜா, “தூத்துக்குடியில் அமையப்பெற்றுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பிரம்மாண்டமாக தொடங்கி வைக்கப்பட உள்ளது,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மினி உலக முதலீட்டாளர் மாநாட்டிற்குத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பல்வேறு புதிய தொழில்கள் தூத்துக்குடிக்கு வரவுள்ளன. பிரதமர் மோடியின் புதிய திட்டங்களால் தமிழ்நாட்டுக்கு பலன்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், தூத்துக்குடி மாவட்டத்திற்கான வெள்ள நிவாரணத் தொகையையும், கல்விக் கட்டணத்தையும் பிரதமர் வழங்கியிருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பரந்து விரிந்த மனம் உள்ளது. பிரதமர் மோடி அறிவித்ததைவிடப் பன்மடங்கு பெரிய திட்ட அறிவிப்புகள் தூத்துக்குடிக்குக் காத்திருக்கின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வரலாற்று வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.


உங்களிடம் செய்தி இருக்கிறதா? எங்களிடம் சொல்லுங்கள்!

உங்கள் பகுதியில் நடந்த சம்பவங்கள், சமூகப் பிரச்சினைகள், அல்லது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய முக்கியமான தகவல்கள் என எதுவாக இருந்தாலும், எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அனைத்துத் தரப்பு மக்களின் குரலையும் எங்கள் ஆன்லைன் இதழ் மூலம் கொண்டு சேர்க்க நாங்கள் காத்திருக்கிறோம்.

செய்திகளைப் பகிர அல்லது தகவல்களைத் தெரிவிக்க, எங்கள் ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்:

ஆசிரியர்: பா. செந்தில் குமார் தொடர்புக்கு: 9655550896,0461-7960026

Leave a Reply