தூத்துக்குடி,நவம்பர்-18,
வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களின் 89-வது நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தூத்துக்குடி, ஒட்டப்பிடாரத்தில் பிறந்து வழக்கறிஞராகப் படித்து, சுதேசி நாயகனாகத் திகழ்ந்து, கப்பலோட்டிய முதல் தமிழராக உருவானவர் வ.உ.சி. தமிழ் மீதும் தேசத்தின் மீதும் பற்றுக்கொண்டு, நாட்டின் விடுதலைக்காக அவர் போராடினார்.ஆங்கிலேயரின் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்கும் கொடுமைக்குள்ளாகி, அங்கேயே வீரமரணமடைந்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த அன்னாரின் 89-வது நினைவு நாளில் போற்றி வணங்குவதாக வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
