தூத்துக்குடி அண்ணாநகர் பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேறியது:புதிய ரேஷன் கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி,நவம்பர்-20,

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அண்ணாநகா் பகுதியில் பொதுமக்களிடம் குறைேகட்கும் முகாம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட அமைச்சாிடம் இந்த பகுதியில் குடியிருக்கும் நாங்கள் அதிக எண்ணிக்கையிலான ரேஷன்கார்டு இருப்பதால் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியிருப்பதால் பல வயது முதிா்வு பெற்றவா்களும் சில நேரங்களில் போக்குவரத்து இடையூறுகளால் இன்னல்கள் ஏற்படுகிறது. அதனால் இந்த பகுதியில் புதிதாக கடை அமைத்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தனா்.
அதனடிப்படையில் சில நாட்களில் டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் ஒரு பகுதியில் தூத்துக்குடி வேளான் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைசங்கம் சாா்பில் புதிய கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வந்தனா்.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதியிலிருந்து 13 லட்சம் மதிப்பீல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமிபூஜையை ெதாடங்கி வைத்த நிலையில் கட்டுமான பணி முழுமையாக முடிந்ததையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் புதிய ரேசன்கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சுப்புராஜ். வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனா் தனலட்சுமி, பொதுவிநியோக திட்ட சாா்பதிவாளர் அந்தோணிபட்டுராஜ், வட்டார வளர்ச்சி அலுவலா் ஐகோட் மகாராஜா, உதவி செயற்பொறியாளர் ரவி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், வட்டச்செயலாளர் செந்தில்குமாா், கவுன்சிலா் அதிஷ்டமணி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், அவைத்தலைவர் ராஜ்மோகன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், காா்த்திகேயன், சுப்பிரமணியன், துணைச்செயலாளர்கள் சந்திரசேகா், சபேசன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக பொறுப்பாளர் அற்புதராஜ், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா். அமைச்சாிடம் வைத்த கோாிக்கையை நிறைவேற்றி கொடுத்தற்கு பொதுமக்கள் பாராட்டு தொிவித்தனா்.

Leave a Reply