தூத்துக்குடி,டிசம்பர்-02,
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் பெயரை மாற்ற முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் பெயரை மாற்ற முயற்சிப்பர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில்பட்டி சுற்று வட்டார யாதவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு லட்சுமிராஜா என்பவர் உயிரிழந்தார். அவர் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் வம்சாவளி ஆவார். லட்சுமிராஜாவிற்கு நினைவேந்தல் கூட்டம் 26.11.2025 அன்று கட்டாரங்குளத்தில் அவரது மகன்கள் குமாரராஜா மற்றும் மோகனராஜா ஆகிய இருவரும் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
நிகழ்ச்சியில் அழகுமுத்து கோனின் பெயரை அழகுமுத்து தேவர் என பெயரை திரித்து விளம்பர பலகை அச்சிட்டு நிகழ்ச்சி நடக்கும் இடம் முழுவதும் நிறுவி இருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் வீரன் அழகுமுத்துகோன் தேவர் இனத்தைச் சார்ந்தவர் என நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாத அழகுமுத்துகோனின் ஜாதி என்னவென்று விழாவில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்கள் பேசினர்.
இவ்வாறாக நினைவேந்தல் கூட்டம் என்று ஏற்பாடு செய்து அரசியல் மேடையாக மாற்றி அதற்கு நேர் முரணாக அதை அழகுமுத்துகோன் தேவர் இனத்தை சேர்ந்தவர் என்று அவதூறு பரப்பியது மட்டும் இல்லாமல் கோவில்பட்டி மாவட்ட முதன்மை நீதிமன்றம் அசல் வழக்கு எண் 101/1999 ல் வீரன் அழகுமுத்துகோன் ‘யாதவர்’ என தீர்ப்பளித்தது. அதை கோவில்பட்டி சார்பு நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கு எண்.13/2004ல் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.
இந்த வழக்கின் முழு தகவலையும் அறிந்த மோகனராஜா மற்றும் குமாரராஜா தன்னுடைய சொந்த அரசியல் லாபத்திற்காக இரு சமூகங்கள் இடையே பிரச்சனை மற்றும் நல்ல உறவை சிதைப்பதற்காக இவ்வாறாக அவர்கள் சுய லாபத்திற்கு நினைவேந்தல் கூட்டம் என்ற பெயரில் மக்களின் பொது வாழ்க்கையை பாதிக்கும் ஜாதி கலவரம் போன்றவைகளை தூண்டி அரசியல் அனுதாபம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகின்றனர்.
குமாரராஜா என்பவர் எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் Deputy Thasildar ஆக பணிபுரிந்து வருகிறார். அரசு ஊழியராக இருந்து கொண்டு இரு சமூகங்கள் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் பிளவு வாத அரசியல் செய்து வருகிறார். குமாரராஜா போலி ஜாதி சான்றிதழை பயன்படுத்தியே அரசு வேலை வாங்கி உள்ளார். குமாரராஜாவின் தந்தை லட்சுமிராஜா உண்மையை மறைத்து அரசை ஏமாற்றி மறவர் என சாதி சான்று பெற்றுள்ளார்.
உண்மையில், லட்சுமிராஜாவின் தந்தை சுந்தர்ராஜ் யாதவர் இனத்தை சேர்ந்தவர் என்று 1965 ஆவணங்கள் வெளிகாட்டுகின்றன. தந்தை யாதவராக இருக்கையில் லட்சுமிராஜா மறவர் என சான்றிதழ் வாங்கி இருப்பது சட்டப்படி தவறாகும். இவ்வாறு தங்களின் உண்மையான ஜாதியை மறைத்து குமாரராஜா அரசு வேலை வாங்கி உள்ளார். எனவே பொது பிரச்சனைகளை தூண்டும் வகையில் செயல்படும் குமாரராஜா மற்றும் மோகனராஜா ஆகிய இருவர் மீதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு அவர்களின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யாதவர் சங்கத் தலைவர் என்.ராமர், தலைமையின் மனு கொடுத்தனர் பொன் ராஜ், மாரியப்பன், அய்யனேரி குமார், தோட்டிலோவன்பட்டி ராமர், சதீஷ்குமார் மற்றும் பெண்கள் உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.