சட்ட மேதை அம்பேத்கர் 69வது நினைவு நாள்: தூத்துக்குடியில் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மரியாதை!

தூத்துக்குடி,டிசம்பர்-6-

சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த அஞ்சலி நிகழ்வின்போது, மக்கள் நல உரிமை அமைப்பாளரும், வழக்கறிஞருமான அருணா தேவி ரமேஷ் பாண்டியன் அவர்களும், மேலும் பல இளம் வழக்கறிஞர்களும் கலந்துகொண்டு, அம்பேத்கரின் சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்காக அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

Leave a Reply