தருவைகுளம் கடல் பகுதியில் இன்று கருங்கல்லினால் ஆன பழங்கால அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த அம்மன் சிலை, காமாட்சியம்மன் தோற்றத்தில் அமைந்துள்ளது. சிறப்பாக, சிலையின் ஒருகையில் உடுக்கை காணப்படுகிறது மற்றும் அம்மனின் பாதத்தின் கீழே நாகம் ஒன்று படமெடுக்கும் நிலையில் உருவமைக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த அம்மன் சிலையை ஏராளமானோர் வழிபட்டு சென்றனர்.
தருவைகுளம் கடலில் அம்மன் சிலை கண்டெடுப்பு
