பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மீனவர் பிரிவு மாநில அளவிலான மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், மீனவர் பிரிவு மாநில அமைப்பாளர் சீமா அகஸ்டல் தலைமையில் நடைபெற்றது. அணி மற்றும் பிரிவு மாநில பொறுப்பாளர் கே.டி. ராகவன் முன்னிலை வகித்த இந்தக் கூட்டத்தில், தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத் தலைவர்கள் சிதரங்கதன், சரவணன கிருஷ்ணன், மீனவர் பிரிவு துணை அமைப்பாளர் சண்முகா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், ஒரு வார காலத்திற்குள் மீனவர் சங்கங்களின் பட்டியலைச் சேகரிப்பது, அரசுத் திட்டங்கள் குறித்த தொகுப்புப் புத்தகத்தை 20 நாட்களுக்குள் வெளியிடுவது, மாநிலத் தலைவர் சுற்றுப்பயணத்தில் மீனவர் பிரிவின் பங்களிப்பை உறுதி செய்வது, நவம்பர் 21 மீனவர் தினத்தை ஒட்டி ஏழு நாட்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பேரணிகள் நடத்துவது, மற்றும் பொங்கலுக்குப் பின்பு மீனவர் பிரதிநிதிகள் மாநாடு நடத்துவது உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.