பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

கடந்த செப்டம்பர் 20, சனிக்கிழமை அன்று தமிழக பாஜக மாநிலத் தலைமையின் ஒப்புதலுடன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் அணி மற்றும் பிரிவு மாவட்டத் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட அணி மற்றும் பிரிவு மாவட்டத் தலைவர்களுக்கான அறிமுகக் கூட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அணியைச் சேர்ந்த ஏழு மாவட்டத் தலைவர்களும், பிரிவைச் சேர்ந்த 24 மாவட்டத் தலைவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் கே.என்.ஆர். பரமசிவம், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள், செயலாளர்களான முத்துராமலிங்கம், சிவராமன், மாசாணம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், புதியதாக பொறுப்பேற்ற தலைவர்களுக்கு அவர்களின் முக்கியப் பணிகள் மற்றும் செய்ய வேண்டிய ஆலோசனைகளை வழங்கினார்.

விளம்பர தொடர்புக்கு:9789625946.

Leave a Reply