தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சிறு குழந்தைகள் சறுக்கி விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் சிறார்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை அகற்றி,நல்ல முறையில் குழந்தைகள் விளையாடுவதற்கு மாற்றி தரும்படி மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

