தூத்துக்குடி பிரதான சாலையில் மரத்துண்டோடு எச்சரிக்கும் ‘ஆபத்துப் பள்ளம்’!மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்…!

தூத்துக்குடி,நவம்பர்-18-

தூத்துக்குடி நகரின் முக்கியப் போக்குவரத்துப் பகுதியான மேம்பாலம் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் ஏற்பட்டுள்ள அபாயகரமான பள்ளம், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பள்ளத்தின் ஆழம் அதிகம் என்பதால், விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு,அப்பகுதி மக்களால் ஒரு மரத்துண்டு வைக்கப்பட்டு, தற்காலிக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், வாகனங்கள் சர்வீஸ் சாலைக்குத் திரும்பும்போது, இந்தப் பள்ளத்தைக் கவனிக்காமல் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் துறை உடனடியாக இந்தப் பள்ளம் அமைந்துள்ள இடத்தை ஆய்வு செய்து,சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தூத்துக்குடி மக்கள் செய்தி சார்பாக வலியுறுத்துகிறோம்.

Leave a Reply