தூத்துக்குடி மாநகராட்சி நியமன உறுப்பினர் பதவி: மாற்றுத்திறனாளி இளைஞர் ஜஸ்டின் மனு!

தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்க உத்தரவிட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு கெ. ஜஸ்டின் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் நேற்று விருப்ப மனு அளித்தார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ரூகேந்தர் லாலிடம் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின், “உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதிய ஒளியை ஏற்றியுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “துணை முதல்வர் எனக்குச் செய்த உதவியால் அவரது பெயரிலேயே பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறேன். தூத்துக்குடி மாநகராட்சி நியமன உறுப்பினராகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்தால், மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் 24 மணி நேரமும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்” என்று உறுதியளித்தார். தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெக் ஜீவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின்போது உடனிருந்தனர்.

Leave a Reply