தட்டப்பாறை குழந்தைகள் இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை ஊராட்சியில் இயங்கி வரும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூப்பந்து மைதானம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் மைதானத்தின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:-

Leave a Reply