Site icon thoothukudipeople.com

திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்!

பிப் 7ம் தேதி விருதுநகாில் நடைபெறவிருக்கும் தென்மண்டல இளைஞரணி மாநாடு குறித்து சண்முகபுரம் பகுதிக்குட்பட்ட பகுதி துணை இளைஞரணி அமைப்பாளர் மற்றும் வார்டு இளைஞரணி அமைப்பாளர் ஆலோசனை கூட்டம் 27வது வார்டில் கவுன்சிலா் சரண்யா ராஜ்குமார் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு சண்முகபுரம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இதில் மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு சண்முகபுரம் பகுதி இளைஞரணி சார்பாக 500க்கும் மேற்பட்ட இளைஞர்களை கலந்து கொள்வது பற்றி வார்டு இளைஞர் அணியுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், சண்முகபுரம் பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூரியகாந்த், மாநகர இளைஞரணி துணை வார்டு அமைப்பாளர்கள் பாலமுருகன், முகமது ரஃபீக், நாகராஜன், சின்னராஜா, லிங்கேஷ், சண்முகமகாராஜா, அப்துல் காதர், ராஜ்குமார், ராஜகுரு, சண்முகபுரம் துணை அமைப்பாளர்கள் செல்வசுபாஷ், காஜாமுதீன், ஆலிவர் அலாய் ஸ்டெபின், முஹம்மது பாசில், பெத்து கணேஷ், பால செல்வகுமார், ஈனமுத்து, செந்தில் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச் செயலாளர் சாமிநாதன், வட்ட பிரதிநிதிகள் சந்தனராஜ், ராம் வெங்கடேஷ், உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Exit mobile version