கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஜூன் 17ஆம் தேதி) நடைபெறுகிறது. இந்த கூட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கும். விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்களது விவசாயம் மற்றும் நில விவகாரங்கள் தொடர்பான குறைகள், பாசன வசதிகள்,விவசாயக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.