விஜய் மட்டுமல்ல யார் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

தூத்துக்குடி, விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நடிகர் விஜய் மட்டுமல்ல, யார் தேர்தல் களத்திற்கு வந்தாலும் அ.தி.மு.க., இரட்டை இலைக்கு வழங்கக்கூடிய வாக்குகள் எங்களுக்கே விழும்” என்று தெரிவித்தார்.
மேலும், “2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கையுடன் இருக்கலாம். ஆனால், தற்போதைய சூழ்நிலை தி.மு.க.வுக்கு எதிராகவே உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார். தி.மு.க., த.வெ.க. (தமிழக வெற்றி கழகம்) மற்றும் சீமான் ஆகியோர் இரண்டாம் இடத்திற்குப் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஒரு நிலையான இடத்தை அளிக்க தயாராகி விட்டார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிதான் வெற்றி பெறும்” என்றும் அவர் கூறினார்.

செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:-

தூத்துக்குடி மக்கள் செய்திகள்:

PH-97896-25946,0461-7960026.

Leave a Reply