தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஏற்பாடு:கோடைகால அறிவியல் திரைப்படம்…மாணவர்களுக்கு இலவசம்…!

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக கோடைக்கால சிறப்பு அறிவியல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. “ஏனென்று கேள்?” என்ற தலைப்பில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகாமும், அதற்கிணையான சிறுவர் அறிவியல் திரைப்படக் காட்சிகளும் தூத்துக்குடி அறிவியல் பூங்கா (STEM Park)-இல் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகள் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு மாலைகள் 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறும். திரைப்படத்துக்குப் பிறகு, Film Critics வழங்கும் சிறப்பு விவரிப்பு மாணவர்களுக்கு மேலும் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். இந்த நிகழ்வானது
மாணவர்களுக்கு இலவசமாக நடைபெறுகின்றது. ஆகவே அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டு கொண்டுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள கீழ் காணும் நம்பரில் 📞 +91 95976 13988 / +91 82207 50082 முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் தகவலுக்கு கீழ்காணும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்…

Leave a Reply