மக்கள்,வியாபாரிகளுக்கு குட் நியூஸ்:வந்தேபாரத் ரயில் இனி கோவில்பட்டியில் நின்று செல்லும்:

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் (எண். 20665/20666) இன்று (அக்டோபர் 9) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வணிக நகரமான கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என எம்.பி. கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, துரை வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதே போல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவில்பட்டி வந்தபோது எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ கோரிக்கை மனு அளித்தார்.

இதன் விளைவாக, ரயில்வே வாரியம் பரீட்சார்த்த முறையில் இந்த நிறுத்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. புதிய அறிவிப்பின்படி, திருநெல்வேலியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் ரயில், காலை 6.38 மணிக்கு கோவில்பட்டிக்கு வந்து, 6.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் கோவில்பட்டியிலும் நின்று செல்லும். இந்த அறிவிப்பு கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள், வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply