தூத்துக்குடி, ஸ்பிக் நகரில் இயங்கி வரும் இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகம் (HPSEWA) சார்பில், கல்வி கட்டண உதவித்தொகை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று (ஜூலை 20, 2025) வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
விழாவில் TFL – தூத்துக்குடி ஆல்கலி கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (TAC) நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ்குமார்,ஆடிட்டர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் புத்தகப் பை மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். HPSEWA அமைப்பின் நிறுவனர் ராஜேந்திரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், 20 மாணவர்களுக்கு மொத்தம் ரூ. 1,20,000 கல்வி கட்டண உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், இலவச டியூஷன் மைய ஆசிரியைகளின் சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி முடிவில் புத்தகப் பை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் ஸ்பிக் / கிரீன் ஸ்டார் நிர்வாகத்தினருக்கும்,பேனா, ஃபைல் உள்ளிட்ட பொருட்கள் தூத்துக்குடி ஜானகி குரு பேப்பர் ஸ்டோர் நிர்வாகத்துக்கும்,சாரதா நர்சரி பள்ளி நிர்வாகாத்துக்கும் HPSEWA அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை HPSEWA துணைத் தலைவர் சுந்தரேசன், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ஜெயக்குமார், மற்றும் செயற்குழு உறுப்பினர்களான ராஜாகாந்தி, மகாராஜன், சாத்தப்பன், கார்த்திக், மணிபாரதி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
உள்ளூர் தகவல்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள,
தூத்துக்குடி மக்கள் செய்திகள் WhatsApp சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்!
சேனலில் இணைய, இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46