கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னை திரும்பினார்.
அவருக்கு ஆதரவாக தொண்டர்கள் குவிந்ததாலும், எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த வரவிருப்பதாகக் கிடைத்த தகவலாலும், சென்னையில் உள்ள விஜய் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று விஜய் வீட்டை முற்றுகையிட வந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். மேலும், விஜய் வீடு அமைந்துள்ள பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைக்குப் பின்னரே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே, ஏற்கனவே ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல, பனையூரில் உள்ள விஜய் கட்சியின் அலுவலகத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் தனது சுற்றுப்பயணத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு சுற்றுப்பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:-
தூத்துக்குடி மக்கள் செய்திகள்:
PH-97896-25946,0461-7960026.