சர்வதேச யோகா தினம்:தூத்துக்குடி மகளிர் பூங்காவில் களைகட்டிய யோகா பயிற்சி!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியின் மகளிர் பூங்காவில் பிரமாண்டமான யோகா விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்களான ஜெயசீலி, பவானி, மரிய சுதா, வைதேகி, சுப்புலட்சுமி உள்ளிட்டோரும், யங் இந்தியன்ஸ் அமைப்பினர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு யோகா பயிற்சிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டனர். இந்த யோகா பயிற்சி, உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

Leave a Reply