ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கக் கோரி வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்: அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கண்டனம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல உரிமை அமைப்பின் அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் விதித்த தடையால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சோகமான சூழலில், இன்று விவிடி சிக்னல் அருகே சில வழக்கறிஞர்கள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து, அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தியது, பொதுமக்களிடையே அச்சத்தையும், வன்முறையைத் தூண்டும்விதமாக அமைந்துள்ளது. எனவே, காவல்துறையினர் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு பார் கவுன்சிலும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply