Site icon thoothukudipeople.com

மனோஜ் பாரதிராஜா மறைவு..நேரில் அஞ்சலி செலுத்திய த.வெ.க தலைவர் விஜய்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தியும் வருகிறார்கள்.
அதன்படி  த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தனது இல்லத்தில் இருந்து நடந்தே சென்று அவருடைய உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார். மேலும், இன்று மாலை 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ்  உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version