தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி புதிய நூலகங்களைத் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை புத்தகப் பூங்காவையும், பொது நூலக இயக்ககம் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்களையும், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடத்தையும், 70 சிறப்பு நூலகங்களையும் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்திலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் அமைக்கப்பட்டிருந்த நூலகங்களை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவகுமார், அரசு தலைமை உறைவிட மருத்துவர் சைலஸ் , துணை மேயர் ஜெனிட்டா , பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா , முதல் நிலை நூலகர் ராம் சங்கர், மண்டல தலைவர் கலைசெல்வி , மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ரெக்ஸ்லின், தனலட்சுமி, ராமு அம்மாள் , மும்தாஜ், பேபி ஏஞ்சலின், மரிய கீதா, பவானி, நாகேஸ்வரி , மரிய சுதா  வைதேகி , சுப்புலட்சுமி , அந்தோணி மார்ஷலின், முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply