தூத்துக்குடி,நவம்பர்-25,
தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை பெய்வதையொட்டி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவுபடி பி அண்டி காலணி பகுதியில் மழைநீர் வௌியேற்றம் எட்டையாபுரம் ஹவுசிங் போா்டு பகுதியிலிருந்து வடிகால் மூலமாகவும் மின் மோட்டாா் மூலமாகவும் மழைநீர் வெளியேற்றம் கேடிசி நகாில் பாதாள சாக்கடை நீரேற்று நிலையம் மூலமாக போல்பேட்டை பகுதியில் நடைபெறும் மழைநீர் வெறியேற்றம் மச்சாது நகா் ஆதிபாராசக்தி நகா் ஆகிய இடங்களில் மின்மோட்டாா் மற்றும் பாதாள சாக்கடை நீரேற்று நிலையம் மூலமாக மழை நீர் வெளியேற்றுதல் புறநகா் பகுதியிலிருந்து பண்டாரம் பட்டி குளத்திற்கு வருகின்ற மழைநீரையும் மேலும் மாநகருக்குள் வராமல் இருப்பதற்காகவும் நான்காம் கேட் அருகில் பக்கிள் ஓடையில் மழைநீா் வெளியேறுவது புறநகாிலிருந்து வருகின்ற மழைநீா் மாவட்ட தொழில்மையம் முன்புள்ள வடிகால் மூலம் ஊருக்குள் வராமல் இருப்பதை நிகிலேசன் நகா் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்காத வகையிலும் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்று மேயர் ஜெகன் பொியசாமி சூழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, இளநிலை பொறியாளர் செல்வம், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், மாநகராட்சி கணக்கு குழு தலைவா் ரெங்கசாமி, கவுன்சிலா் முத்துவேல், சுகாதார ஆய்வாளர் ராஜசேகா், உள்பட பலர் உடனிருந்தனா்.