தெப்பத் திருவிழாவை நடத்த முழு ஒத்துழைப்பு: அதிகாரிகளிடம் மேயர் உறுதி அளித்தும் பலனில்லை!

தூத்துக்குடி பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுரை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தெப்பத் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அப்போது தெப்பக்குளத்தின் தென்புறம் வடபுறம் மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது இதனால் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 1ம் தேதி தெப்ப திருவிழா நடைபெறும். அதற்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி நிர்வாகம் தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவில் அதிகாரிகள் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெப்பக்குளத்திற்கு வருகை தந்திருந்தனர். அதுபோல இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சிவன் கோவில் அறங்காவலர்கள். சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர் உள்ளிட்டோா் தெப்பக்குளத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது மேயர் ஜெகன்பொியசாமி கூறுகையில் மாநகராட்சி சார்பில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை முழுவதுமாக சரி செய்யப்பட்டு தெப்ப திருவிழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாநகராட்சி நிர்வாகம் செய்து தர தயாராக உள்ளது என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர் இனி எந்த பாதிப்பும் கிடையாது என்று அதன் அடிப்படையில் தெப்பத் திருவிழா நடைபெறுவதற்கான பணிகளை மாநகராட்சி 100 சதவீதம் செய்து தர தயாராக இருக்கிறது என்று கூறினார்.
அதற்கு அறநிலைதுறை அதிகாரிகள் சிவன் கோவில் அறங்காவலர் குழு ஆகியோர் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தெப்ப திருவிழா நடைபெறாது அடுத்தாண்டு நடைபெறும் என்று மேயர் ஜெகன் பொியசாமியிடம் கூறினார்கள். அதற்கு மேயர் ஜெகன் பொியசாமி அனைத்து வசதிகளும் அனைத்து ஏற்பாடுகளும் மாநகராட்சி செய்து தரும் நீங்கள் தெப்பத் திருவிழாவை நடத்துங்கள் என்றார் அதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் இல்லை அதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று கூறினார்கள்.
இதனையடுத்து மேயர் ஜெகன் பொியசாமி உடனடியாக பழமை மாறாமல் தெப்பக்குளத்தை சீர் அமைக்கும் பணியை உடனடியாக துவக்கினாா். காலங்காலமாக நடைபெற்று வந்த தெப்பத் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி நிலவியுள்ளது.
ஆய்வின் போது சிவன் கோவில் அறங்காவலா் குழு முன்னாள் தலைவர் கந்தசாமி, அறங்காவலா் குழு உறுப்பினா் ஆறுமுகம், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அஸ்வினி, உதவி செயற்பொறியாளர் முத்துராமன்மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply