Site icon thoothukudipeople.com

நகருக்குள் நுழையாமல் பைபாஸ் செல்லலாம்: தூத்துக்குடி மக்களின் நீண்டநாள் கனவு நனவாகிறது!மேயா் ஜெகன் பொியசாமிக்கு பொதுமக்கள் பாராட்டு!

தூத்துக்குடி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதுபோல வாகனங்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் தினசரி அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் வாகனங்கள் செல்வதற்கான வசதிகள் தொடர்ந்து செய்து தர வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோாிக்கையும் வந்து கொண்டே இருக்கிறது. அதை பூர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சி நிா்வாகமும், செய்து வருகின்றன.

விஇ ரோடு, சண்முகபுரம், பெருமாள் தெரு பகுதியில் பணங்காடு என்று ஒன்று இருந்து வந்தது.அதில் இருந்த வழித்தடத்தில் பொதுமக்கள் பய உணா்வோடு சென்று வந்த நிலையில், சாலையும் மின்விளக்கும் அமைத்து தரக்கோாி கோாிக்கை வைத்ததையடுத்து பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தததை யடுத்து பொதுமக்கள் மேயா் ஜெகன் பொியசாமிக்கு பாராட்டு தொிவித்தனா்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், மேயர் ஜெகன் பெரியசாமி புதிய சாலை வழித்தடங்களை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சுமார் 40 ஆண்டுகளாக ‘பணங்காடு’ என்று அழைக்கப்பட்ட ஒத்தையடிப் பாதையைச் சீரமைத்து, மின்விளக்கு வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ள அவர், இதன் மூலம் ஜார்ஜ் ரோடு மற்றும் சண்முகபுரம் வழியாக வி.இ. ரோட்டிற்கு பொதுமக்கள் எளிதாகச் செல்ல வழிவகை செய்துள்ளார். மேலும், மீளவிட்டான் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கதிர்வேல் நகர் முதல் மீளவிட்டான் மற்றும் மடத்தூர் வரை சாலை அமைப்பதற்காக, சுமார் 3 கிலோமீட்டர் தூரம் முட்புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்குள் இரண்டு மணி நேரம் மேயர் நேரில் நடந்தே சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் மூலம் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய மங்கம்மா சாலையை அவர் கண்டறிந்துள்ளார்.
இந்தச் சாலைப் பணிகள் நிறைவடைந்தால், வாகனங்கள் நகருக்குள் வராமல் நேரடியாக மதுரை பைபாஸ் மற்றும் தேசிய நெடுஞ்சாலையை அடைய முடியும் என்பதால், நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். கண்டறியப்பட்ட பாதையில் உள்ள உடை மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, சாலைப் பணிகளை விரைந்து தொடங்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சிப்காட் நிறுவனம் மூடி வைத்துள்ள சாலையை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். ஏற்கனவே புதுக்கிராமம் மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் புதிய வழித்தடங்களை உருவாக்கிப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு கண்டுள்ள நிலையில், தற்போது மீளவிட்டான் பகுதியில் மேயர் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், திமுகவை சேர்ந்த தேவபிச்சை, கணேசன், உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பொதுமக்கள் உடனிருந்தனா்.

Exit mobile version