தூத்துக்குடி,டிசம்பர்-6,
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
தூத்துக்குடி அம்பேத்கர் 69வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியாசமி ஆகியோா் தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளார்கள் நல வாாிய தலைவர் ஆறுச்சாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.