மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள்:அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!

கோவில்பட்டி,டிசம்பர்-11-

மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் ஆகியோருடன் இணைந்து இன்று பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷூ மங்கல், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, வட்டாட்சியர் சுபா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply