தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பரிவல்லிக்கோட்டை ஊராட்சியில், ரூபாய் 9.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இரண்டு மின்மாற்றிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேற்று (ஜூன் 23, 2025) இயக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.
பரிவல்லிக்கோட்டை கிராமத்தின் வடக்குத் தெருவில், 150 மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில், ரூபாய் 6.50 லட்சம் மதிப்பில் 63 KVA திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தெற்குத் தெருவில் 50 மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில், ரூபாய் 3 லட்சம் மதிப்பில் 25 KVA திறன் கொண்ட மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது.
புதிய மின்மாற்றிகள் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம், அப்பகுதி மக்களுக்குச் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும் என்றும், மின் தடையின்றி தங்கு தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மின்வாரிய உதவிப் பொறியாளர் பால்முனியசாமி, வருவாய் ஆய்வாளர் முருகலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சுடலைகண்ணு, ஊராட்சிச் செயலாளர் மனோகரன், கிளைக் கழகச் செயலாளர்களான சௌந்தரபாண்டியன், சிவக்குமார், சரவணன், கண்ணன், குட்டி உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.