தூத்துக்குடி தருவையில் ₹50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு

தூத்துக்குடி தருவையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.50 லட்சம் செலவில் குளிர்சாதன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடம், திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி. நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தருவை மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள குளிர்சாதன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த நவீன உடற்பயிற்சி கூடத்தில் ட்ரட்மில், லெக்பிரஸ், சைக்கிளிங் ஃபுல் அப்ஸ்பார், தம்பிள்ஸ் மற்றும் ஜிம் பால்
உள்ளிட்ட ஹைட்ராலிக் வசதிகளுடன் கூடிய விளையாட்டு சாதனங்கள் இடம்பெற்றுள்ளன.

விளையாட்டு வீரர், வீராங்கனைகள், இளைஞர்கள், பொதுமக்கள் அனை வரும் இந்த நவீன உடற்பயிற்சி கூடத்தை முறையாக பயன்படுத்தி உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் அந்தோணி அதிஸ்டராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply