தூத்துக்குடி மாவட்டம், ஆரைகுளம் கிராமத்தில் ஓட்டப்பிடாரம் மேற்கு மண்டல பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ விழா சிறப்பாக நடைபெற்றது. மண்டலத் தலைவர் செல்வின் லக்ஷ்மன் சவான் தலைமையில், விவசாய அணி மண்டலத் தலைவர் சுடலைமணி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
மாவட்டத் துணைத் தலைவரும், மத்திய அரசு வழக்கறிஞருமான செந்தில்பிரபு, விவசாய அணி மாவட்டத் தலைவர் ஜெயகண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், வர்த்தகர் பிரிவு மாவட்டத் தலைவர் முத்தமிழ்செல்வன், விவசாய அணி மாவட்டத் துணைத் தலைவர் சுபி பிரேம், மண்டல பொதுச்செயலாளர் பேச்சியம்மாள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.

