தூத்துக்குடியில் புதிய மினி பஸ் சேவைகள் தொடக்கம்;கனிமொழி எம்.பி. கொடியசைத்து துவக்கி வைத்தார்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (16.06.2025), போக்குவரத்துத் துறை சார்பில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில்  மாவட்டம் முழுவதும் 27 வழித்தடங்களில் புதிய மினி பஸ் சேவைகள் தொடங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பங்கேற்று, மினி பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ,மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஏ.கே. முருகன், கோவில்பட்டி கிரிஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply