காமராஜரை இழிவுபடுத்திய முக்தார்: தூத்துக்குடி எஸ்.பி.யிடம் நாடார் பேரவை புகார்!

தூத்துக்குடி,டிசம்பர்:6-

தூத்துக்குடி காமராஜர் பற்றியும் நாடார் சமூகத்தை பற்றியும் மிகவும் இழிவாகவும், அவதூறாகவும் முக்தார் அகமது என்பவர் தனது யூடியூப் ேசனலில் நேர்காணல் என்ற பெயரில் பொய்யான அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டார் முக்தார் அகமது மற்றும் அவரது பின்னால் இருக்கும் சமூக விரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்நாடு நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் ஜெயச்சந்திரன் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளருக்கும். மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் புகார் மனு வழங்கியுள்ளார்.

புகாா் மனுவில் தொிவித்ததாவது கடந்த 30.11.2025ம் தேதியில் மை இந்தியா 247 என்ற யூடியூப் சேனலில் முக்தார் அகமது என்பவர் கிறிஸ்தவ மதபோதகர் காட்பிரே நோபலிடம் நேர்காணல் எடுத்துள்ளார். அப்போது தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரையும் அயராத உழைப்பாலும், சிறு குறு வியாபாரிகளாகவும், தொழிலதிபர்களாகவும் சுயமாக வளர்ந்து கொண்டிருக்கும், நாடார் சமுதாயத்தையும் இழிவாக, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி ஒட்டுமொத்த நாடார் சமுதாயத்தையும் இழிவுப்படுத்தி கூட்டுசதி செய்து பண ஆதாயத்திற்காக பொய்யான சங்கதிளை கூறி மை இந்தியா 247 என்ற யூடியூப் சேனலில் முக்தார் அகமது என்பவர் முன்னாள் முதலமைச்சர் காமராஜாின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது ஆட்சிக் காலத்தில் ஊழல் துவங்கியது எனவும், காமராஜர் ஆட்சிக் காலத்தில் தான் சிவகாசியில் கள்ள நோட்டுகள் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் இருந்தது என்றும், ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசியுள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலை அதிகப்படியானவர்கள் பார்த்து தனக்கு அதிக வருமானம் வரவேண்டும் என்ற உள்நோக்கத்தில் திட்டமிட்டு முக்தார் அகமது இழிவாக பேசியுள்ளார். தமிழகத்தில் உள்ள 1 கோடிக்கும் அதிகமான நாடார் சமூகத்தினரை சிவகாசியில் கள்ள நோட்டுகள் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் இருந்தது உள்ளிட்ட பல்வேறு ஆதாரமில்லாத தவறான தகவல்களை கூறி இழிவாக பேசி ஜாதி துவேசத்துடன், ஜாதி வெறியை தூண்டிவிட்டு அதன் மூலம் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் ஜாதி கலவரம் உருவாக வஞ்சக கூட்டு சேர்ந்து சதி திட்டம் தீட்டி, கூட்டு சதி செய்து பண ஆதாயத்திற்காக பொய்யான அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு சிறுமைப்படுத்த வேண்டும் என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஜாதி, மதகலவரம் தூண்ட திட்டமிட்டு செயல்பட்டு வரும் சமூக விரோதி முக்தார் அகமதுவையும் அவருக்கு பின்னணியில் இருந்து செயல்படும் சமூக விரோத கும்பல்கள் மீதும் புலன் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். மேலும் மை இந்தியா 24*7 என்ற யூடியூப் சேனலை முடக்கம் செய்து, மேற்படி காமராஜர் பற்றியும், நாடார் சமுதாயம் பற்றியும் எந்த வித ஆதாரமில்லாமல் இழிவாக பேசிய பதிவுகளை உடனடியாக நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு அளித்த கோாிக்கை மனுவில் தொிவித்துள்ளாா்.

Leave a Reply