Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி மக்கள் புகார்களை நேரடியாகத் தெரிவிக்க புதிய வசதி–அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்! சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் அவர்கள், தங்களது தொகுதியில் உள்ள அனைத்து துறைகளையும் தொடர்புடைய குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தெரிவிக்கும் புதிய வசதிகளை அறிவித்துள்ளார்.
மக்கள், தங்களது புகார்களை கீழ்காணும் வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தெரிவிக்கலாம்:
QR Code ஸ்கேன் செய்து
வாட்ஸ்ஆப் எண்: 80980 24555
தொலைபேசி எண்: 80980 24555
வெப்சைட்: https://pgeethajeevan.com/petition/?lang=ta

இத்தகவல்களைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் பிரச்சனைகளை நேரடியாக அமைச்சரிடம் தெரிவித்தால், குறுகிய காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்

Exit mobile version