திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 23ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் மாணிக்கராஜா அக்கட்சியிலிருந்து விலகி சென்னை அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தாா்.

இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் மாணிக்கராஜா தலைமையில் கயத்தாறு கடம்பூா் பகுதியை சேர்ந்த அமமுகவை சோ்ந்த நிா்வாகிகள் 200 போ் போல்பேட்டை கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இணைப்பு விழாவில் மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல் செல்வக்குமாா், கோவில்பட்டி செல்லத்துரை, மாவட்ட வழக்கறிஞா் அணி செயலாளர் செந்தில்குமாா் உட்பட 200 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளா் ராஜ்மோகன் செல்வின், மாநகர செயலாளா் ஆனந்தசேகரன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஐயாத்துரைபாண்டியன், ஒன்றிய செயலாளா்கள் சின்னப்பாண்டியன், கருப்பசாமி, கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் கணேசன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளர் விஸ்வநாத்ராஜா, பகுதி செயலாளா் ஜெயக்குமாா், மாநகரஇளைஞர் அணி அமைப்பாளா் அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ரவி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
