தூத்துக்குடி:ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு காலங்கரை கிராமத்தில் கடந்த ஆண்டு கனமழையில் கரை உடைந்து பாதிப்புக்குள்ளான கோரம்பள்ளம் குளத்தின் கரைகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா
நேரில் சென்று ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் குளத்தின் கரைகளின் தன்மை மற்றும் நீர்வரத்தின் அளவை தொடர்ந்து கண்கானிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி பொறியாளர் நஸ்ரின் வினு,ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு,
கிளை செயலாளர்கள் பெருமாள்,இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.