கரூர் கூட்ட நெரிசல்: விபத்தா, சதியா? சிபிஐ விசாரணை கோரி தவெக முறையீடு!உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை!

கரூரில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்து அல்ல, திட்டமிட்ட சதி என சந்தேகிப்பதாகவும், இதுதொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் தவெக (தமிழக வெற்றி கழகம்) தரப்பினர் உயர் நீதிமன்ற விடுமுறைகால நீதிபதி தண்டபாணியிடம் நேற்று முறையிட்டனர்.

நீதிப​தி​யிடம் தவெக வழக்​கறிஞர் அறிவழகன், இணை பொதுச் செய​லா​ளர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் ஆகியோர் முறை​யிட்​ட​தாவது: பிரச்சாரத்தின்போது கற்கள் வீசப்பட்டதாகவும், போலீசார் தடியடி நடத்தியதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து, நீதிபதி தண்டபாணி, சம்பவம் நடந்த கரூர், மதுரை உயர் நீதிமன்ற அமர்வின் எல்லைக்குள் வருவதால், இன்று (29-ம் தேதி) பிற்பகல் 2.15 மணிக்கு மதுரை அமர்வில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார். இதற்கிடையே, வேறொரு வழக்கில் மூத்த வழக்கறிஞர் சங்கரன், “கரூர் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி யார் பொறுப்பு எனத் தெரியும்வரை தவெக பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று நீதிபதி செந்தில்குமார் முன்பு முறையிட்டார். மேலும், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பிலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், இது பொதுநல வழக்கு என்பதால், நீதிபதி செந்தில்குமார் அதனை விசாரிக்க மறுத்துவிட்டார்.

செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:-

தூத்துக்குடி மக்கள் செய்திகள்:

PH-97896-25946,0461-7960026.

Leave a Reply