Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் நாளை (ஜன. 21) மின்தடை: எந்தெந்தப் பகுதிகள் பாதிக்கும்?

தூத்துக்குடி: சிப்காட் 110/22KV துணை மின் நிலையத்தில் நாளை (21.01.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மடத்தூர், கதிர்வேல் நகர், சிப்காட் வளாகம், அசோக் நகர், ஆசிரியர் காலனி, மில்லர்புரம், முத்தம்மாள் காலனி, அன்னை தெரசா நகர், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டிமார்ட் (D-Mart) சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மேலும், மதுரை பைபாஸ் ரோடு, அகில இந்திய வானொலி நிலையம், FCI குடோன், NGO காலனி, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version